எனக்கு ‘சாய் பல்லவி’ மீது கிரஷ்! பாலிவுட் நடிகர் ஓபன் டாக்: தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை சாய் பல்லவி. தனது வசீகர அழகினாலும், அசாத்திய நடனந்தினாலும், யதார்த்த நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, ஒரு சில படங்களிலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக SK 21, தெலுங்கில் புஷ்பா 2 படத்திலும் நடித்து வருகிறார்.


இந்நிலையில் பாலிவுட் நடிகர் குல்ஷன் தேவய்யா என்பவர் சாய் பல்லவி குறித்து சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளதாவது, “இதில், நடிகை சாய் பல்லவி மீது தனக்கு ஒரு கிரஷ் இருப்பதாகவும், அவருடைய செல்போன் நம்பர் தன்னிடம் இருந்தும் கால் செய்து சாய் பல்லவியிடம் பேச துணிச்சல் இல்லை என்றும் கூறியுள்ளார். அவர் மீது தனக்கு வெறும் கிரஷ் தான் என கூறிய குல்ஷன் தேவய்யா அதை தாண்டி வேறு எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார். 45 வயதாகும் நடிகர் குல்ஷன் தேவய்யா ஏற்கனவே விவாகரத்து ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘தங்கலான்’ குறித்து மனம் திறந்த நடிகை மாளவிகா மோகனன்
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…