ஹே சினாமிகா திரைப்பட விமர்சனம் | Hey Sinamika Movie Review & Rating

0
Hey Sinamika Movie Review and Rating
Hey Sinamika Movie Review and Rating

ஹே சினாமிகா திரைப்பட விமர்சனம்

படக்குழு:

நடிகர்கள்: துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் ஹைதரி மற்றும் பலர்.

இசை: கோவிந்த் வசந்தா

ஒளிப்பதிவு: ப்ரீத்தா ஜெயராமன்

எடிட்டிங்: ராதா ஸ்ரீதர்

தயாரிப்பு: ஜியோ ஸ்டுடியோஸ், வியாகாம்18 ஸ்டுடியோஸ் & க்ளோபல் ஒன் ஸ்டுடியோஸ்

இயக்கம்: பிருந்தா (நடன இயக்குனர்).

Hey Sinamika Movie Review and Rating
Hey Sinamika Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

நாயகன் துல்கர் & நாயகி அதிதி ராவ் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். என்னதான் விரும்பி கல்யாணம் செய்துக் கொண்டாலும் இரண்டே வருடத்தில் இவர்களுக்குள் ஏற்படும் மனகசப்பு, அதிதிக்கு எப்படியாவது இவனைவிட்டு  செல்ல வேண்டும் என முடிவு செய்கிறார். இறுதியாக இவர்கள் பிரிந்தார்களா? சேர்ந்தார்களா? என்பதே மீதிக் கதை.

Hey Sinamika Movie Review and Rating
Hey Sinamika Movie Review and Rating

FC விமர்சனம்:

நடன இயக்குனராக வெற்றிக்கரமாக வளம்வந்துக் கொண்டிருக்கும் பிருந்தா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். சரி, படம் எப்படி என பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை துல்கர் சல்மான், அதிதி ராவ் & காஜல் அகர்வால் மூவருமே மிக நன்றாக நடித்துள்ளனர். அந்தந்த கதாப்பாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர். குறிப்பாக அதிதி ராவிற்கு அவரது திரை வாழ்கையில் சொல்லும்படியான நடிப்பு, பாத்திரம் என சொன்னால் மிகையாகாது.

ப்ரீத்தா ஜெயராமனின் ஒளிப்பதிவு காட்சிகளில் அழகு, கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான், ஆனால் பின்னணி இசை சொல்லும்படியாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு மதன் கார்க்கி கதை எழுத பிருந்தா இயக்கியுள்ளார். இதில் வருத்தம் என்னவென்றால் இது அர்ஜென்டினா படமான ‘A Boy Friend for My Wife’ படத்தின் ஜெராக்ஸ்தான் இந்த ஹே சினாமிகா. இப்படம் தென் கோரிய மொழியிலும் வெளியாகி சக்கைப்போடு போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்தே மதன் கார்க்கி என்ன கதை எழுதினார் என்பது உங்களுக்கே தெரியும்.

Hey Sinamika Movie Review and Rating
Hey Sinamika Movie Review and Rating

இப்படத்தின் குறையாக தெரிவது படத்தின் நீளம் தேவையில்லாத என தோன்றுகிற காட்சிகள் நிறைய வைத்து நம்மை சோர்வடைய செய்துள்ளனர். உதாரணத்திற்கு யோகி பாபு வரும் ஐந்து நிமிட காட்சி யப்பா!!! முடியல… இப்படி கோவம் வரும் காட்சிகளை கத்திரித்து, திரைக்கதையில் மேலும் சுவாரஸ்யத்தையும், நம்பகத்தன்மையையும் கொண்டு வந்திருந்தால் இப்படம் தப்பித்திருக்கும். இறுதியாக படம் எப்படி என கேட்டால், காதல் செய்பவர்களுக்கு இப்படம் பிடிக்க வாய்ப்புண்டு, மற்றபடி சுமார் ரகம்தான்…

  Hey Sinamika Movie FC Rating: 2.5 /5  

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்