‘புஷ்பா 2’ படத்தின் ப்ரீ-பிசினஸ் ரிப்போர்ட்:
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘புஷ்பா 2’. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது.


தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சாய் பல்லவி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல ஹிந்தி சினி நிறுவனமான கோல்ட் மைன்ஸ் புஷ்பா 2 படத்தின் அனைத்து உரிமத்தையும் ரூ.1000 கோடிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓரிரு நாட்களில் இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் தயாரிப்பாளருக்கு ரிலீசிற்கு முன்பே ரூ.500 கோடிக்கு மேல் லாபம் கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண