வங்காள விரிகுடாவில் ஏற்பட்டு உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஹைதராபாத் மற்றும் அம்மாநிலத்தின் சில பகுதிகளில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஐதராபாத்தில் உள்ள வனஸ்தலிபுரம், தம்மாய்குடா, அட்டப்பூர் மெயின் ரோடு, முஷீராபாத் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தன. கடுமையாக பாதிக்கப்பட்ட டோலி சவுக்கி பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரெங்காரெட்டிபுரம் மாவட்டத்தில், கந்தேஷ்நகர், சாய்நாத் காலணி, ஹக்கிம்பாத், பேங்க் காலனி, அகமய நகர் பகுதிககளில் வீடுகளில் மழை நீர் புகுந்தது. கனமழை தொடர்வதால், மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.,க்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என தலைமை செயலாளர் சோமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.


இந்த ராட்சச மழையால் இதுவரை, தெலுங்கானாவில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஐதராபாத்தில் கனமழை பெய்ததைத் தொடர்ந்து, பாண்ட்லகுடாவில் முகமதிய ஹில்ஸ் பகுதியில் எல்லைச் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். அக்டோபர் 15 -ஆம் தேதி வரை தெலுங்கானாவின் சில பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...