ஜி.வி. பிரகாஷை தொடர்ந்து அவரது தங்கையும் நடிகையாக அறிமுகமாகவுள்ளார்!

0
GV Prakash's sister Bhavani Sre Debut in Ka Pae Ranasingam

இசையமைப்பாளராக துவங்கி பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்து பிறகு நடிகராக மாறி அதிலும் வெற்றிகண்டு இன்று அரைடஜன் படங்களை கையில் தன்வசம் வைத்திருப்பவர் ஜி.வி.பிரகாஷ்.

GV Prakash's sister Bhavani Sre Debut in Ka Pae Ranasingam
Bhavani Sre

இவரைத் தொடர்ந்து தற்போது இவரின் தங்கை பவானி ஸ்ரீ -யும் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகவுள்ளார். ஏற்கனவே ‘High Priestess‘  என்கிற வெப் தொடர் ஒன்றில் நடித்துள்ள பவானிக்கு இது வெள்ளித்திரை அறிமுகம். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் க/பெ.ரணசிங்கம். இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் பவானி ஸ்ரீ அறிமுகமாகியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தனது தங்கைக்கு வாழ்த்துக்களை கூறி வரவேற்றுள்ளார் ஜி.வி.பிரகாஷ். அதேபோல் ஜி.வி.பிரகாஷின் மனைவி சைந்தவியும், பவானிக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். 

GV Prakash's sister Bhavani Sre Debut in Ka Pae Ranasingam
Snap from Ka Pae Ranasingam Teaser

ஜி.வி.பிரகாஷ்:

சைந்தவி:

 

க/பெ/ரணசிங்கம் திரைப்பட டீசர் வீடியோ:

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...