‘குலு குலு’ திரைப்பட விமர்சனம் | Gulu Gulu Movie Review and Rating

0
Gulu Gulu Movie Review and Rating
Gulu Gulu Movie Review and Rating

‘குலு குலு’ திரைப்பட விமர்சனம் | Gulu Gulu Movie Review and Rating

படக்குழு:

நடிகர்கள்: சந்தானம், அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத் மற்றும் பலர்.

இசை: சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு: விஜய் சார்த்திக் கண்ணன்

எடிட்டிங்: பிலோமின் ராஜ்

தயாரிப்பு: Circle Box Entertainment

இயக்கம்: ரத்னகுமார்.

Gulu Gulu Movie Review and Rating
Gulu Gulu Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

அமேசான் காடுகளில் பிறந்து, உலகமுழுக்க சுற்றிவந்து, 13 மொழிகளை கத்துக்கிட்டு வந்து இப்ப நம்ம ஊரில வேலை வெட்டி இல்லாமல் சுற்றித் திரியும் கதையில் நாயகன், இது ஒருபுறமிருக்க தனது அப்பாவிற்கு ஒரு சின்ன வீடு இருக்கு, அந்த சின்ன வீட்டுக்கு ஒரு பொண்ணும் இருக்கு, எங்க நம்ம சொத்தில் பங்கு கேட்டு வந்து விடுமோ என்கிற பயத்தில் அந்த பெண்ணை கொலை செய்ய திட்டமிடும் இரு அண்ணன்கள். இறுதியாக இந்த சம்பவதிற்குள் சந்தானம் எப்படி வருகிறார்? என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்? இறுதியாக அந்த பெண்ணை காப்பாற்றினாரா? என்பதே கதைச்சுருக்கம்.

FC விமர்சனம்:

‘மேயாத மான்’, ‘ஆடை’ படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் இன்று தியேட்டர்களில் வெளியாகியிருக்கும் ‘குலு குலு’ திரைப்படம் எப்படி இருக்கு? வாருங்கள் விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை சந்தானம் இதுவரை பண்ணாத ஒரு கதாப்பாத்திரம் என்றே சொல்லலாம். சந்தானம் என்றால் நக்கல், கிண்டல், கலகலப்பு இதானே நியாபகம் வரும், ஆனால் இப்படத்தில் (டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் எப்படி சிரிக்காமலே படமுழுக்க வருவாரோ அதேபோல்) சந்தானமும் சிக்கவில்லை நம்மையும் சிரிக்க வைக்கவில்லை. அதான் பிரச்சனையே! அவர் ஏற்ற பாத்திரத்தை திறம்பட செய்துள்ளார் ஆனால் இந்த கதாப்பாத்திரம் சந்தானத்திற்கு துளியும் ஒட்டவில்லை. இவர்களை நிறைய கதாப்பாத்திரங்கள் மரியம் ஜார்ஜ், லொள்ளு சபா மாறன் உள்பட எல்லாருமே கொடுத்த பாத்திரங்களை குறையில்லாமல் செய்துள்ளனர்.

டெக்னிக்கல் டீமை பொறுத்தவரை சந்தோஷ் நாராயணின் இசையில் வாய்க்கு வந்ததை வரிகளாக போட்டு ஏதோ பாடல்களை கொடுத்துள்ளார். அவருக்கே உரித்தான கல்ட் பாடல்கள் இதில் மிஸ்ஸிங். விஜய் சார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு நிறைவு. இப்படத்தில் குறையாக எதை சொல்வது, சுவாரஸ்யமே இல்லாத கதை, திரைக்கதை, சரி காமெடி படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது தான் அதுக்குனு என்னென்னமோ சொல்றாங்கபா! தாங்கமுடியலை. சந்தானம் படம் கதை இருக்கோ இல்லையோ, காமெடி இருக்கும் சந்தோஷமா பார்த்துவிட்டு வருவோம் என்றால்! ஆங்காகே வரும் சின்ன சின்ன டைமிங் வசனங்களை தவிர வேறு காமெடியும் இல்லை. இறுதியாக படம் எப்படி என்றால்? காமெடி படம் என்று நினைத்து போனால் பெருத்த ஏமாற்றமே! அப்போ நல்ல சீரியஸான கதையாக இருக்குமா என சொன்னால் அப்போதும் ஏமாற்றம்தான்! மொத்தத்தில் ரொம்பவும் ஆவ்ரேஜ் படம் தான் இந்த குலு குலு.

Gulu Gulu Movie Film Crazy Media Rating: 2 \5

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்