ஒடிசாவில் மீண்டும் தடம்புரண்ட சரக்கு ரயில்! முழுவிவரம்:
ஒடிசாவில் கடந்த 2ஆம் தேதி இரவு மூன்று ரயில்கள் மோதி பெரும் விபத்துக்குள்ளானது. 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் அதே ஒடிசாவில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து சுண்ணாம்பு கல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. டுங்குரி சுரங்கத்திலிருந்து பர்கர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது சம்பர்தாரா பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவில் மீண்டும் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து
சிமெண்ட் தொழிற்சாலையில் இருந்து சுண்ணாம்பு கற்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது
டுங்குரி சுரங்கத்திலிருந்து பர்கர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது சம்பர்தாரா பகுதியில் விபத்து pic.twitter.com/KFP0FoNc8P
— Arun(அருண் குமார்.வே) (@Arun_report) June 5, 2023
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…