‘மின்னலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கௌதம் வாசுதேவ் மேனன், தனது முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியைக் கண்டார்.


இப்படத்தைத் தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து காக்க காக்க என்கிற கல்ட் திரைப்படத்தை இயக்கினார். சூர்யாவின் திரைப்பயணத்தில் பெரிய திருப்புமுனையாக அமைந்த படமாக காக்க காக்க அமைந்தது. இதைதொடர்ந்து கமல்ஹாசனுடன் வேட்டையாடு விளையாடு, மீண்டும் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா என தொடர்ந்து வெற்றிப் படிகளாக அமைந்தது. இயக்குனராக இருந்த கௌதம் தயாரிப்பாளராக மாறியதன் விளைவு தான் இன்று வரை பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க OTT தளங்களில் சமீப காலமாக கவனத்தை செலுத்தி வருகிறார், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் குயின் வெப் தொடரை இயக்கினார். அது ரசிகர்களிடையே வரவேற்பை பெற தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.


———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 ‘சுஷாந்த் மரணத்திற்கு இது தான் காரணம்’ கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...