கௌதம் கார்த்திக் & மஞ்சிமா திருமணம்! காதல் ஜோடியின் அழகிய படங்கள்: தேவராட்டம் படத்தில் ஜோடியாக நடித்த கௌதம் கார்த்திக் & மஞ்சிமா மோகன் இடையே நிஜத்திலும் காதல் மலர்ந்தது.
நீண்ட நாட்களாக காதலித்து வந்த இருவரும் சமீபத்தில் ரசிகர்களுக்கும், மீடியாவுக்கும் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று(நவ.28) சென்னையில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெரியளவில் விளம்பரம், ஆடம்பரம், வரவேற்பு நிகழ்ச்சி எதுவும் நடைப்பெறாமல், குடும்ப விழாவாக எளிமையான முறையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இளம் ஜோடிகள் இருவருக்கும் திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திருமண புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE