‘கட்டா குஸ்தி’ திரைப்பட விமர்சனம் | Gatta Kusthi Movie Review and Rating

0
Gatta Kusthi Movie Review and Rating
Gatta Kusthi Movie Review and Rating

‘கட்டா குஸ்தி’ திரைப்பட விமர்சனம் | Gatta Kusthi Movie Review and Rating

படக்குழு:

நடிகர்கள்: விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கருணாஸ், காளி வெங்கட் மற்றும் பலர்.

இசை: ஜஸ்டின் பிரபாகரன்

ஒளிப்பதிவு: ரிச்சர்ட் M. நாதன்

எடிட்டிங்: பிரசன்னா GK

தயாரிப்பு: RT Team Works & VV Studioz

இயக்கம்: செல்லா அய்யாவு.

Gatta Kusthi Movie Review and Rating
Gatta Kusthi Movie Review and Rating

கதைக்களம்:

படத்தின் கதாநாயகன் விஷ்ணு விஷால் தான் திருமணம் செய்யப் போகும் பெண்ணிற்கு இரண்டு அடிப்படை தகுதிகள் இருந்தே ஆகணும்னு ஒத்தக்காலில் நிற்கிறார். இதனாலே இவருக்கு வரும் வரன்கள் எல்லாம் தட்டி செல்கிறது. அந்த பக்கம் கதாநாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மி கேரளாவில் குஸ்தி வீராங்கனையாக கம்பீர பார்வையால் மிரட்ட, அதனாலேயே அவருக்கும் திருமணம் தள்ளிப் போகிறது. இந்நிலையில் கருணாஸ் மூலம் ஐஸ்வர்யா லக்ஷ்மி குறித்து விஷ்ணு விஷாலுக்கு தெரியவர, இவர் கேட்ட அந்த இரண்டு தகுதிகளும் சரியாக இருக்க விஷ்ணு ஒத்துக் கொள்கிறார். நாயகியோ பெற்றோர் மனம் நோகக்கூடாது என தனது குஸ்தி வாழ்கையை ஓரங்கட்டி வைக்க, இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. இதன் பிறகு இவர்கள் வாழ்கையில் நடக்கும் சுவாரஸ்யங்கள், (குஸ்தி) போட்டிகள் என்னென்ன என்பதே மீதிக்கதை.

Gatta Kusthi Movie Review and Rating
Gatta Kusthi Movie Review and Rating

FC விமர்சனம்:

நடிகர்களை பொறுத்தவரை விஷ்ணு விஷால், முதல் பாதி காமெடி கலந்த நாயகனாகவும், இரண்டாம் பாதியில் குஸ்தி அதற்கேற்ற உடலமைப்பு, நடிப்புடன் கலக்கியுள்ளார். கதாநாயகிக்கு அதிகம் முக்கியத்துவம் இருந்தாலும் கதையை பிடித்து நடித்ததற்கு கூடுதல் பாராட்டுக்கள். ஐஸ்வர்யா லக்ஷ்மி, சமீப காலமாக இவர் நடிக்கும் படங்கள், ஏற்கும் கதாப்பாத்திரம், நடிப்பு என தமிழ், மலையாள சினிமாவில் அழுத்தமான ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதன்படி இப்படத்திலும் தனது நடிப்பால் வசீகரம் செய்து கைதட்டல் வாங்குகிறார் ஐஸ்வர்யா லக்ஷ்மி. மேலே குறிப்பிட்டது போல விஷ்ணு விஷாலை விட ஐஸ்வர்யாவின் கதாப்பாத்திரமே அழுத்தமாகவும், மனதிலும் நிற்கிறது அதற்கு முக்கிய காரணம் இவரது அருமையான நடிப்பு. இவர்களை தொடர்ந்து வரும் கருணாஸ், முனிஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட அனைவருமே தங்களது பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர்.

ரிச்சர்ட் M. நாதன் ஒளிப்பதிவில் கமர்ஷியல் படங்களுக்கு தேவையான கலர்ஃபுல் காட்சிகள் அருமை. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் & பின்னணி இசை ஓகே ரகம்தான். சண்டைக் காட்சிகள் அனைத்தும் அருமையாக வந்துள்ளது பாராட்டுக்கள் அன்பறிவு (ஸ்டன்ட் இயக்குனர்கள்), பிரசன்னா GK (எடிட்டர்). கதையாக பார்த்தால் பழைய கதைதான் அதிலும் சுமாரான கதைதான் ஆனால் அதை கமர்ஷியல் அம்சங்களை உள்ளடக்கி லேக்கிங் பெருசாக தெரியாமல் கலகலப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் செல்லா அய்யாவு. காமெடி காட்சிகள் சரியாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது பெரிய பிளஸ்.

Gatta Kusthi Movie Review and Rating
Gatta Kusthi Movie Review and Rating

இப்படத்தில் குறையாக தெரிவது, வெளிப்படையாக தெரியும் லாஜிக் மீறல்கள் குறிப்பாக நாயகன் எனக்கு 15 நாட்களில் குஸ்தி கத்துக் கொடுங்கள் என குஸ்தி வாத்தியாரிடம் கேட்க, 15 நாளில் இந்த ஒரு லாக் தான் சொல்லிக் கொடுக்க முடியும் அதை மட்டும் கத்துக்கோ என கூற சொல்லி தருகிறார். ஆனால் அந்த லாக்கை பெரிதாக எங்கயுமே நாயகன் பயன்படுத்தவில்லை எப்படி? ஏன்? என கேள்விகள் வருகிறது. மொத்தமாக படம் எப்படி என்றால், திருமணமான தம்பதியினருக்கு இப்படம் ஈசியாக கனெக்ட் ஆகும், ஆகாதவர்களுக்கு ஒருமுறை கண்டுகளிக்கும் படமாக வந்துள்ளது இந்த கட்டா குஸ்தி.

Gatta Kusthi Movie Film Crazy Media Rating: 3.5 /5

 

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here