ரூ.500க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் – மல்லிகார்ஜுன கார்கே:
மத்தியபிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில், சாகர் என்ற இடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டார்.
அங்கு அவர் பேசுகையில், ‘‘மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கியாஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். மேலும், விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும். மேலும், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படும். வீடுகளுக்கு முதல் 100 யூனிட்களுக்கு மின்சார கட்டணம் கிடையாது” என கூறியுள்ளார்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண