‘சந்திரமுகி 2’ படம் பார்த்து வெளியான முதல் விமர்சனம்!

0
First review of the movie Chandramukhi 2
First review of the movie Chandramukhi 2

 

‘சந்திரமுகி 2’ படம் பார்த்து வெளியான முதல் விமர்சனம்:

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சந்திரமுகி 2’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வடிவேலு, ராதிகா சரத்குமார், லக்ஷ்மி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாகுபலி, RRR படங்களுக்கு இசையமைத்த மரகதமணி (கீரவாணி) இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகவுள்ளது.

First review of the movie Chandramukhi 2
First review of the movie Chandramukhi 2

இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி சந்திரமுகி 2 படத்தை பார்த்துவிட்டு, தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ” சந்திரமுகி 2 படம் பார்த்தேன். இந்த படத்தின் கதாபாத்திரங்கள் மரணபயத்தில் பல இரவுகள் தூங்காமல் இருக்கிறார்கள். நான் கடந்த 2 மாதங்களாக இரவு பகலாக தூங்காமல் படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறேன்” என கூறியுள்ளார். இதன்மூலம் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு கூடுதலாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0