‘ஃபயர்’ பாடல் வரிகள்| Fire Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: ஆதி நெருப்பே
ஆறாத நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே…
ஆண்: பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே…
குழு: ஆதி நெருப்பே
ஆறாத நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே…
குழு: பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே…
ஆண்: மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்தக்குடி
குழு : யாமே யாமே…
ஆண்: என் தோன்றா காலத்தே
எண்ணிக்கை பார்த்தக்குடி
குழு : யாமே யாமே…
ஆண்: ஆதித்தீ சுடரவெல்லாம்
அணையாமல் பார்த்தக்குடி
தீமென்று தீதின்று தீக்காடாய் வாழும் குடி…
ஆண்: வா இரு தோலெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா…
குழு: வா இரு தோலெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா வா வா…
ஆண்: ஆதி நெருப்பே
ஆறாத நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே…
ஆண்: பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே…
குழு : வா வா வா வா…
ஆண்: இடி இடித்தது மழையடித்தது
அடித்தது புயலும்
மலை உடைந்தது அலை எழுந்தது
எழுந்தது பிரளயம்…
ஆண்: கல்லோடும் முள்ளோடும்
காற்றோடும் போராடி
பல்லாண்டு வாழும் இனம்…
ஆண்: பொறி விழுந்தது வனம் எரிந்தது
எரிந்தது நதியும்
முகில் கரைந்தது நிலம் சரிந்தது
திரிந்தது பருவம்…
ஆண்: அங்கார கூத்தாடி
அனலுக்குள் நீராடி
மேலேறி வந்த இனம்…
குழு: வன்னிமரக் கிளை அதிர
வாரணங்கள் அணி திரள
கன்னிமூல கவுளியொன்னு
காலம் சொல்லுதே…
குழு: வெப்பலையில் சொட்டும் அந்த வென்குருதி பாக்கையில
வீச்சருவா வேல்கம்பு வேகம் கூடுதே
சொணையருவி பாறாங்கல்லு மேலிருக்கும் தீக்குருவி
குரலெடுத்து கத்துதம்மா தெற்கு திசையில…
குழு: சென புடிச்ச காட்டு நரி
கொல நடுங்க ஓடுதம்மா
சடசடக்கும் பெரும் நெருப்ப
பார்த்த நொடியில…
ஆண்: வா இரு தோலெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா வா வா…
குழு: வா இரு தோலெடுத்து வா
குறு வாளெடுத்து வா
ஒரு சூளுரைத்து வா வா வா வா…
ஆண்: ஆதி நெருப்பே
ஆறாத நெருப்பே
மாய நெருப்பே
மலை நெருப்பே…
ஆண்: பாயும் நெருப்பே
பாதாள நெருப்பே
காவல் நெருப்பே
காட்டு நெருப்பே…
குழு: வா வா வா வா….
பாடல் விவரம்:
திரைப்படம்: கங்குவா
இசை: தேவி ஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள்: வி.எம். மகாலிங்கம், செந்தில் கணேஷ், செண்பகராஜ் & தீப்தி சுரேஷ்
பாடலாசியர்: விவேகா.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…