FC இன்றைய சினிமா செய்திகள் சில வரிகளில் | FC Today Cinema – Mar 9

0
FC Today Cinema News - March 9th
FC Today Cinema News - March 9th

தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம்

இணையதளங்களில் தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி, அவரிடம் 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம், நடிகர் விஷால் ஆகியோரை எதிர்மனுதாரராக சேர்த்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 1,080 நாட்கள் ஆகியும், வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யாததால், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்ட நீதிபதி, இந்த தொகையை வரும் 31-ஆம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

FC Today Cinema News - March 9th
Silambarasan

தனுஷுக்கு வில்லனாகும் செல்வராகவன்

தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த இயக்குனரான செல்வராகவன் தற்போது நடிகராக பிஸியாகிவிட்டார். சாணி காயிதம், விஜய்யுடன் பீஸ்ட், மோகன் ஜி. இயக்கும் படத்தில் கதாநாயகன் என வரிசைக்கட்டி நிற்கிறது படங்கள். இந்நிலையில் இயக்குனராக தனுஷை வைத்து ‘நானே வருவேன்’ படத்தை இயக்கிவரும் செல்வராகவன், இப்படத்தில் தனுசுடன் இணைந்து செல்வராகவன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனுஷுக்கு வில்லனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

FC Today Cinema News - March 9th
Naane Varuven Update

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை

தமிழ் சினிமாவில் சிறந்த மற்றும் தனக்கு அழுத்தமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். ‘லாக்கப் பட இயக்குனர் சார்லஸ் இயக்கத்தில் Huebox Studios & Hamsini Entertainment நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது. முதன்மை பாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இப்படத்தில் லக்ஷ்மி பிரியா, சுனில் ரெட்டி, ரெடின் கிங்க்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் பூஜை படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

FC Today Cinema News - March 9th
Aishwarya Rajesh New Movie (1)
FC Today Cinema News - March 9th
Aishwarya Rajesh New Movie (1)

 


விஜய்க்கு ஜோடியான நடிகை ராஷ்மிகா

நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு தேசிய விருது இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிகவுள்ளார். வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கவுள்ளது. பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தன்னா ஒப்பந்தமாகியுள்ளார். ஃபேமிலி என்டர்டைன்மென்ட் கதையாக உருவாகவுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார்.

FC Today Cinema News - March 9th
Rashmika Pair with Vijay in Thalapathy 66

மெகாஸ்டார் படத்தில் இணைந்த நடிகை ஸ்ருதி ஹாசன்

தெலுங்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவி வேதாளம் ரீமேக், லூசிபர் ரீமேக் என வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அந்த வரிசையில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், பாபி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். ஆக்சன் டிராமாவாக உருவாகவுள்ள இப்படத்தின் கதாநாயகியாக ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.

FC Today Cinema News - March 9th
Shruti Haasan Joins Megha 154

‘சலார்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் பிரித்விராஜ்

ராதே ஷ்யாம், அதிபுருஷ் படங்களை அடுத்து பிரபாஸ் நடிக்கும் படத்தை கே ஜி எஃப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடித்து வருகிறார். Hombale Films தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகிவரும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராதே ஷ்யாம் படத்தின் ப்ரொமோஷனுக்காக கேரளா சென்ற பிரபாஸ் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

FC Today Cinema News - March 9th
Salaar Update

Money Heist சீரிஸ், மங்காத்தா பாணியில் AK61

வலிமை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் குமார் – எச். வினோத் கூட்டணியில் மீண்டும் உருவாகவுள்ள திரைப்படம் AK 61(தற்காலிக பெயர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் அதிதி ராவ் ஹைதரி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தின் கதை இதுதான் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி,  AK 61 படம் வங்கி கொள்ளையை மையப்படுத்தி அதாவது Money Heist சீரிஸ், மங்காத்தா போல உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நெகடிவ் கதாப் -பாத்திரத்தில் அஜித் நடிக்கவுள்ளதாகவும், இதற்காக சுமார் 25 கிலோ எடை குறைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

FC Today Cinema News - March 9th
AK 61 Movie Latest Update

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்