‘தளபதி 66’ விஜய்க்கு வில்லனாகும் பிரபல பாலிவுட் நடிகர்

0
Famous Bollywood actor as villain in Thalapathy 66
Famous Bollywood actor as villain in Thalapathy 66

பீஸ்ட் படத்தை அடுத்து விஜய்யின் 66-வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவுள்ளார். தமிழ் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் தயாரிக்கிறது. இது அவர்களின் முதல் நேரடி தமிழ் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Famous Bollywood actor as villain in Thalapathy 66
Famous Bollywood actor as villain in Thalapathy 66

ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தமன் இசையமைக்கவுள்ளதாக கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது ‘தளபதி 66’படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிந்தியில் பிரபல நடிகரான விவேக் ஓபராய், தமிழில் அஜித்தின் ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்