13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 13-வது போட்டி துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.


இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதரபாத் அணி நிதானமாகவே ரன்களை சேகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, சென்னை அணியின் ஸ்டார் பிளேயர் டூ பிளிசிஸ் இன்றும் ஒரு அசத்தல் கேட்ச் பிடித்து பாராட்டை பெற்றுள்ளார். அதுவும் மெயின் விக்கெட்! பியூஸ் சாவ்லா வீசிய பந்தில், டேவிட் வார்னர் தூக்கி அடிக்க, சிக்ஸ் லைனில் தாவி பிடித்து விக்கெட்டை கைப்பற்றினார் டூ பிளிசிஸ். இது தற்போது இணையத்தில் டிரன்டாக வருகிறது, ஹைதராபாத் அணியின் முக்கிய வீரரான டேவிட் வார்னர் ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
* அனுஷ்கா நடிப்பில் ‘நிசப்தம்’ திரைவிமர்சனம்
* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...