எதற்கும் துணிந்தவன் திரைப்பட விமர்சனம் | Etharkkum Thunindhavan Review

0
Etharkkum Thunindhavan Movie Review and Rating
Etharkkum Thunindhavan Movie Review and Rating

எதற்கும் துணிந்தவன் திரைப்பட விமர்சனம் – Etharkkum Thunindhavan Review and Rating

படக்குழு:

நடிகர்கள்: சூர்யா, பிரியங்கா மோகன், வினய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர்.

இசை: டி.இமான்

ஒளிப்பதிவு: ரத்னவேலு

எடிட்டிங்: ரூபன்

தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்

இயக்கம்: பாண்டிராஜ்.

Etharkkum Thunindhavan Movie HD Stills
Etharkkum Thunindhavan Movie HD Stills

கதைச்சுருக்கம்:

கிராமத்தில் துடிப்பான இளைங்கனான கதையின் நாயகனான சூர்யா (கண்ணபிரான்), வக்கீல் பாத்திரத்தில் வருகிறார். அவர் வாழும் தென்னாடு கிராமத்திற்கும், வடநாட்டு கிராமத்திற்கும் ஏற்படும் பகை, தென்னாட்டு கிராமத்தை சேர்ந்த பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோக்கள் எடுத்து கொடூர காமப்பசிக்கு இரையாக்கும் வில்லன் வினய். இந்த செய்தி தெரிய களத்தில் இறங்கும் சூர்யா, இறுதியாக எப்படி வில்லனை வீழ்த்தினார்? என்பதே கதைச்சுருக்கம். 

Etharkkum Thunindhavan Movie HD Stills
Etharkkum Thunindhavan Movie HD Stills

FC விமர்சனம்:

சூரரைப் போற்று, ஜெய்பீம் என்கிற இரண்டு தரமான படங்களை கொடுத்த சூர்யா நடிப்பில் அடுத்து வெளியாகியிருக்கும் திரைப்படம் இந்த ‘எதற்கும் துணிந்தவன்’, சரி படம் எப்படி என்பதை பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை சூர்யா அவருக்கே உரித்தான கம்பீரத்தில் மிரட்டியுள்ளார், சில இடங்களில் கலகலப்பான சூர்யாவையும் பார்க்க முடிந்தது. நாயகி பிரியங்கா மோகன் க்யூட் கிராமத்து பெண்ணாக மனதை கொள்ளை கொள்கிறார். இவர்களை தவிர வரும் மற்ற பாத்திரங்களான சத்யராஜ், சரண்யா, வினய், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் கொடுத்த பாத்திரங்களை நிறைவாக செய்துள்ளனர். சூரி, புகழ் காமெடி நோ கமெண்ட்ஸ்…

டெக்னிக்கல் டீமை பொறுத்தவரை படத்திற்கு பெரிய பலம்தான், ரத்னவேலுவின் ஒளிப்பதிவு டாப் கிளாஸ், அதேபோல் இமானின் இசை காட்சியின் போக்கிற்கு விறுவிறுப்பை அள்ளிக் கொடுத்துள்ளது. ரகரகமாக BGMஐ கொடுத்துள்ளார். படத்தில் இரண்டே சண்டைக் காட்சிகள் தான் ஆனால் இரண்டும் செமா மாஸாக அமைந்துள்ளது, பிரபல இரட்டை சண்டை இயக்குனர்கள் ராம் & லக்ஷ்மணன், அன்பறிவு அவர்களுக்கு வாழ்த்துக்கள். சில மாதங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி தங்களது காமப்பசியை தீர்த்துக்கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அந்த சம்பவத்தை மையக்கருவாக வைத்து தான் இப்படம் உருவாகியுள்ளது.

Etharkkum Thunindhavan Movie HD Stills
Etharkkum Thunindhavan Movie HD Stills

ஆனால், எந்த இடத்திலும் முகம் சுளிக்கும் அளவிற்கு இல்லாமல் டீசன்ட்டாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ் அதற்கே பெரிய பாராட்டுக்கள். சொல்ல வந்த கதை தற்போதைய சூழலில் முக்கியமான ஒன்று எனவே படத்தின் தரம் மேலோங்கி நிற்கிறது. இவையெல்லாம் இருந்தாலும் கமெர்ஷியல் படங்களுக்கே உரித்தான சில லாஜிக் மீறல்கள், ஒட்டாத காமெடிகள், சகித்து கொள்ள முடியாத காட்சிகள் இதிலும் உண்டு. குறிப்பாக சூர்யா – பிரியங்கா காதல் தொடர்பான காட்சிகள் ஆபத்தின் உச்சம். 

இதுதான் இப்படி என்றால் வில்லன் கதாப்பாத்திரம் கீழே ஏதேனும் குறிப்பு இவர்தான் வில்லன் என சொன்னால்தான் தெரியும். அந்தளவிற்கு டம்மியான வில்லன் பாத்திரம் படத்திற்கு கூடுதல் சரிவு. இப்படிப்பட்ட கதைக்களத்திற்கு வில்லனை பார்த்தாலே நமக்கு கோபமும், பயமும் வரவேண்டும் ஆனால் இந்த வில்லனை பார்த்தால் நமக்கு சிரிப்பும், பரிதாபமும் தான் வருகிறது. அடுத்ததாக படத்தின் இரண்டாம் பாதியில் இருந்த விறுவிறுப்பும், அழுத்தமும் முதல் பாதியில் குறைவு. மேலே குறிப்பிட்டதுபோல் சில போரிங்கான காட்சிகளை வைத்து நகர்த்தியுள்ளனர். இறுதியாக படம் எப்படி? என்றால், மொத்தமாக படம் சுமார் ரகம் தான் என்றாலும், எடுத்துக்கொண்ட கதைக்காக விழிப்புணர்வு ரீதியாக குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் தான் இந்த ‘எதற்கும் துணிந்தவன்’.

பாராட்டுக்கள்: கதை, சூர்யா, சண்டை இயக்குனர்கள், ஒளிப்பதிவு & இசை)

  Etharkkum Thunindhavan Movie FC Rating: 3 /5  

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்