மோகன்லால் நடிப்பில் ‘Empuraan’ பட மிரட்டலான டீசர் இதோ:
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘லூசிபர்’, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘Empuraan’ என்கிற பெயரில் இயக்க திட்டமிட்டு படப்பிடிப்பையும் முடித்து விட்டார் பிரித்விராஜ். தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் பாகத்தை தயாரித்த ஆஷிர்வாத் நிறுவனத்துடன் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். வரும் மார்ச் 27ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஆக்ஷன் காட்சிகள், பிராம்மாண்ட மேக்கிங் உடன் வெளியாகியுள்ள இந்த டீசர் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Empuraan டீசர் இதோ,
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…