பிராவோ அடுத்த சில போட்டிகளிலும் விளையாடுவது சந்தேகம்தான்! பயிற்சியாளர்

0

ஐபில் சீசன் கொண்டாட்டம் நேற்று முதல் கலைக்கட்டியுள்ளது, முதல ஆட்டமே சென்னைக்கும், மும்பைக்கும் நடைபெற ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 162 ரன்கள் எடுத்து, 163 ரன்களை சென்னைக்கு இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த சென்னை அணியில் அம்பாதி ராயுடு மற்றும் டூ பிளிசிஸ் அபார பேட்டிங்கால் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

Dwayne Bravo out for couple of games
Dwayne Bravo out for couple of games

இதுஒருபுறம் இருக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான வீரர்களில் ஒருவரான டுவைன் பிராவோ நேற்று விளையாடாமல், சப்ஸ்டியூட்டாக இருந்தார். என்னவென்றால், சமீபத்தில் நடைபெற்று முடிந்த சி.பி.எல் தொடரில் விளையாடிய பிராவோ, மூட்டு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அந்த தொடரின் கடைசி போட்டியில் பங்கேற்க வில்லை. மேலும் அங்கிருந்து திரும்பிய பிராவோ பயிற்சியை மேற்கொண்டாலும் காயத்துடன் இருந்துள்ளார். அதனால் நேற்றைய போட்டியில் அவர் களம் இறங்கவில்லை. மேலும் இத்தொடரின் அடுத்த சில போட்டிகளிலும் அவர் விளையாடுவது என்று அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் தெரிவித்துள்ளார். அவர் இடத்தில் நேற்று ஆல்ரவுண்டராக அசாத்திய சாம் குரன் தொடவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போதைய செய்திகள்:-

⮕ ஐபிஎல் தொடரில் கேப்டன் தோனியின் முதல் விக்கெட்!

⮕ தோனி சந்தித்த முதல் பந்தில் அவுட் கொடுத்த அம்பயர்! தோனி ரிவ்யூ சிஸ்டம்

⮕ ‘ரகிட ரகிட ஊ’ ஹர்பஜன்சிங்கின் ட்ரேட்மார்க் பாராட்டு

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

⮕ அனுஷ்காவின் ‘நிசப்தம்’ திரைப்படம் OTT-ல் வெளியீடு

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…