“இப்படி பட்ட படங்கள் ஒரு நடிகனுக்கு கிடைப்பது பாக்கியம்” சீதா ராமம் குறித்து துல்கர்:
துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சீதா ராமம். காதல் கதையை முற்றிலும் அழகாக, மனதை உருக்கும் கிளைமாக்ஸ் காட்சிகளுடன் அமைந்த இப்படம் இன்றளவும் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளது. இந்நிலையில் இப்படம் வெளியாகி ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இப்படம் குறித்த நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை நடிகர் துல்கர் சல்மான் பகிர்ந்துள்ளார்.


அதில் கூறியுள்ள சுவாரஸ்யமான தகவல்கள் இதோ: “ஓராண்டை நிறைவு செய்த, முடிவை மறுக்க முடியாத எபிக் திரைப்படம். மொழி ஒரு பெருட்டல்ல, உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் இப்படம் குறித்த அன்பை பகிர்ந்துகொள்பவர்களை நான் சந்திக்கிறேன். இப்படி பட்ட படங்கள் ஒரு நடிகனுக்கு கிடைப்பது பாக்கியம். ஹனு சார் – ராம் என்ற கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்ததற்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது. உங்கள் கனவை பெரிய திரையில் கொண்டு வந்ததற்கு உங்கள் தன்னலமற்ற அன்பு தான் காரணம்.
இதையும் படிங்க 👉 ‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் இதோ
ஸ்வப்னா தத் – இந்திய சினிமாவில் சூப்பர் ஹீரோ இல்லை என யார் சொன்னார்கள்? முழு திரைப்படத்தையும் ஆதரித்த தைரியமான சூப்பர் பெண் ஹீரோ. என்னை போன்ற ஒரு நடிகரை வைத்து இப்படி ஒரு திரைப்படத்தை உருவாக்கி உள்ளீர்கள். என்னுடைய திரைப்பயணத்தை புதிய கோணத்தில் மாற்றியது நீங்கள் தான். அதற்காக உங்களுக்கும் வைஜெயந்தி மூவிஸுக்கும் நான் என்றும் கடமை பட்டுள்ளேன்” என உருக்கமாக கூறியுள்ளார்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண