இந்தியாவிலிருந்து துபாய் சென்ற விமானங்களில் பயணித்த பயணிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, வரும் அக்டோபர் 3 -ஆம் தேதி வரை ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ விமானங்கள் பறக்க தடைவிதித்து துபாய் விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், மீண்டும் கொரோனா பாதித்த பயணிகளை விமானத்தில் ஏற்றி வருவதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய முழு விவரத்தையும் தாக்கல் செய்யுமாறும் துபாய் அரசு ஏர் இந்தியாவிடம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த கொரோனாவால் வெளிநாட்டில் வேலைப்பார்ப்பவர்கள், விடுமுறைக்கு இந்தியா வந்து மீண்டும் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...