போர் விமானமோ என்கிற சந்தேகம்! வாஷிங்டனில் ஏற்பட்ட பதற்றம்

0
Doubt that it is a fighter plane! Tension in Washington
Doubt that it is a fighter plane! Tension in Washington

போர் விமானமோ என்கிற சந்தேகம்! வாஷிங்டனில் ஏற்பட்ட பதற்றம்:

அமெரிக்கா, வாஷிங்டன் பகுதியில் ‘செஸ்னா 560 சிட்டாசன் வி’ என்கிற விமானம் பறந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் விமான கட்டுப்பாட்டு அறையிலிருந்து அதிகாரிகள் அந்த விமானத்தை தொடர்பு கொள்ள முயன்றனர். அந்த விமானத்தில் இருந்து பதில் கிடைக்கவில்லை.

இந்நிலையில், அந்த விமானத்தை நோக்கி போர் விமானம் சென்றது. போர் விமானம் அதிர்வலைகளுடன் பயங்கர சத்தத்துடன் பறந்து அதை விரட்டியடிக்க முயன்றது. இதனால் வீட்டில் இருப்பவர்கள் என்ன ஆனதோ? என பதறியப்படி வானத்தை பார்த்து அச்சம் அடைந்தனர். இறுதியில் வாஷிங்டன் வான் எல்லையில் இருந்து விலகி மலைப்பகுதியில் மோதி விபத்துள்ளானது. அந்த விமானத்தில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பது தெரியவில்லை. பயணம் செய்த யாரும் உயிர்ப்பிழைக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

 

சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0