‘டான்’ திரைப்பட விமர்சனம் | Don Movie Review and Rating

0
Don Movie Review and Rating
Don Movie Review and Rating

‘டான்’ திரைப்பட விமர்சனம் | Don Movie Review and Rating

படக்குழு:

நடிகர்கள்: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் பலர்.

இசை: அனிருத்

ஒளிப்பதிவு: K.M. பாஸ்கரன்

எடிட்டிங்: நாகூரான் ராமசந்திரன்

தயாரிப்பு: லைகா ப்ரொடக்ஷன்ஸ் & SK ப்ரொடக்ஷன்ஸ்

இயக்கம்: சிபி சக்ரவர்த்தி.

Don Movie Review and Rating
Don Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

பொறியியல் கல்லூரி ஒன்றில் கடைசி பெஞ்ச் மாணவனான நாயகன் சிவகார்த்திகேயன், அதே கடைசி பெஞ்சில் இருந்து கல்லூரி பிரின்சிபாலான வில்லன் SJ சூர்யா இவர்களுக்குள் நடக்கும் ஆடுபுலி ஆட்டமே இப்படத்தின் கதைச்சுருக்கம்.

Don Movie Review and Rating
Don Movie Review and Rating

FC விமர்சனம்:

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படம் அவரின் முந்தைய வெற்றியான டாக்டர் படத்தை எட்டியதா என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை, சிவகார்த்திகேயன், SJ சூர்யா & சமுத்திரக்கனி மூன்று பெரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் அவருக்கே உரித்தான அந்த எனெர்ஜியுடன், நக்கல், நய்யாண்டி சேர்த்து கலக்கியுள்ளார். பிரின்சிபாலாக வரும் SJ சூர்யா, சமுத்திரக்கனி இருவருமே அருமையான நடிப்பை கொடுத்துள்ளனர். நாயகி பிரியங்கா மோகனை பார்த்து கொண்டே இருக்கலாம், அவ்வளவு அழகு அதும் ஸ்கூல் கெட்டப்பில் மனதிலேயே நிற்கிறார். இவர்களை தவிர மற்ற பாத்திரங்கள் அனைவருமே கொடுத்த பாத்திரங்களை நிறைவாகவே செய்துள்ளனர்.

Don Movie Review and Rating
Don Movie Review and Rating

டெக்னிக்கல் டீமை பொறுத்தவரை K.M. பாஸ்கரனின் கலர்ஃபுல்லான கல்லூரி காட்சிகள் கண்களுக்கு விருந்தளிதுள்ளது. இப்படத்தின் முதுகெலும்பாக அனிருத்தின் இசை இருந்தது என்றால் மிகையாது. இப்படத்தின் பாராட்டுக்குரிய விஷயம் என்னவென்றால் படத்தில் வரும் வசனங்கள், உதாரணமாக “முயலும் சரி ஆமையும் சரி இரண்டுமே ஜெய்க்கும், ஆனால் முயலாமை என்பது கண்டிப்பாக ஜெய்காது” என ஆங்காங்கே அள்ளித் தெளித்திருக்கிறார். இப்படத்தின் குறையாக தெரிவது இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் இப்படத்தை இன்னும் குறைத்திருக்கலாம், காரணம் என்னதான் சுவாரஸ்யாமாக சென்றாலும் இடையில் ஏற்படும் சலிப்பை தவிர்க்க முடியவில்லை. இறுதியாக படம் எப்படி என்றால் இந்த சம்மரை குடும்பத்துடன் சென்று கண்டுகளிக்கும் ஜனரஞ்சக படமாக இந்த டான் அமைந்துள்ளது. 

Don Movie FC Rating: 3 /5

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE