திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூரை சேர்ந்தவர் சச்சி (எ) சச்சிதானந்தன், எர்ணாகுளம் சட்டக்கல்லூரியில் எல்எல்பி முடித்து, கேரள உயர்நீதிமன்றத்தில் 8 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.
சினிமா மீதுள்ள காதலால் மலையாள சினிமாவில் கதாசிரியராக அறிமுகமாகி பின் இயக்குனராக மாறினார். இவர் கதாசிரியராக பல படங்கள் செய்திருந்தாலும், இயக்குனராக மொத்தம் 2 படங்கள் தான். அந்த இரண்டு படங்களிலுமே பிரித்விராஜ் மற்றும் பிஜூ மேனன் தான் கதாநாயகர்கள். அதிலும் சமீபத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும் படம் தாறுமாறு ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் சச்சியின் அடுத்த படம் என்ன? யார் ஹீரோ? என்ற கேள்வி மலையாள ரசிகர்களிடையே பேசப்பட்டு வந்த நிலையில், திடீரென காலாமானார். மாரடைப்பு
ஏற்பட்டு திரிச்சூர் ஜூப்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டு மரணித்துள்ளதாக கூறப்படுகிறது. இவரின் இழப்பால் மலையாள திரையுலகம் மொத்தமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 ‘சுஷாந்த் மரணத்திற்கு இது தான் காரணம்’ கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...