தளபதி 66 கண்டிப்பாக ‘Heart Touching’ படமாக இருக்கும்! – தில் ராஜூ பேச்சு

0
Dil Raju Latest Speech about Thalapathy 66
Dil Raju Latest Speech about Thalapathy 66

தளபதி 66 கண்டிப்பாக ‘Heart Touching’ படமாக இருக்கும்! – தில் ராஜூ பேச்சு: நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் ‘தளபதி 66’படத்தில் நடித்து வருகிறார்.

👉 ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர் நடிக்கும் வெப் தொடர் ‘சுழல்’ ஃபர்ஸ்ட் லுக்!

தில் ராஜு இயக்கும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் சரத்குமார் விஜயின் அப்பாவாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Dil Raju Latest Speech about Thalapathy 66
Dil Raju Latest Speech about Thalapathy 66

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ சமீபத்திய பேட்டியொன்றில் “தளபதி 66 படத்தில் ஆக்ஷன், ரொமான்ஸ், எமோஷனல் என அனைத்தும் உள்ளது. குடும்பக் கதையாக உருவாகியுள்ள
இப்படத்தில் நிறையவே எமோஷனல் காட்சிகள் உள்ளது. மொத்தமாக கண்டிப்பாக ‘Heart Touching’ படமாக இருக்கும்” என கூறியுள்ளார்.  ரசிகர்களும் விஜய் காவலன் போன்ற மென்மையான படமொன்றில் நடிக்க வேண்டுமென எதிர்ப்பார்த்த நிலையில் இப்படம் அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யுமென தோன்றுகிறது. 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்