முதன் முறையாக மூன்று வேடங்களில் சந்தானம் நடித்துள்ள ‘டிக்கிலோனா’ படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது.
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சினிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இப்படத்தில் சந்தானங்களுடன் அனைகா, ஷிரின், முன்னால் இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன்சிங் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனீஸ்காந்த், ‘நிழல்கள்’ ரவி, சித்ரா லட்சுமணன், ‘மொட்டை’ ராஜேந்திரன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தானம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதல் பார்வை() தற்போது வெளியாகியுள்ளது. இதில் ஒரு சந்தானம் மற்ற இரண்டா சந்தானங்களின் கழுதை இறுக்கி பிடித்திருப்பது போல் இந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...