துருவ் விக்ரம் – மாரி செல்வராஜ் பட ஷூட்டிங் எப்போது? வெளியான அப்டேட்:
மாமன்னன் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் ‘வாழை’ என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ்.


பா.ரஞ்சித்தின் நீளம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் தூத்துக்குடியில் துவங்கவுள்ளது. மேலும், பிரபல கபடி வீரரான மனத்தி கணேசன் அவர்களின் வாழ்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இதுக்குறித்த அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண