இந்திய கிரிக்கெட் அணியின் மறக்க முடியாத கேப்டனான மகேந்திர சிங் தோனி, தற்போது ஓய்விற்கு பிறகு கால்பந்து போன்றவற்றிலும், பைக், கார் கலெக்ஷன் ஆகியவற்றிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அதிலும் பைக், கார்கள் மீது அதிகளவு ஈர்ப்பு கொண்ட தோனி 50க்கும் அதிகமான பைக்குகள், 10க்கும் அதிகமான கார்களை தனது வீட்டில் சேகரித்து வருகிறார்.
அந்த வகையில், ராஞ்சியின் தெருக்களில் விண்டேஜ் ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒட்டி செல்லும் தோனியின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 1980ஆம் ஆண்டு பிரபலமான இந்த காரை இப்போது பார்ப்பது அரிது, அதிலும் தோனி அந்த காரை ஒட்டி செல்வது கூடுதல் சிறப்பாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
Ms Dhoni spotted driving his vintage rolls royce at Ranchi !! #MSDhoni #Ranchi pic.twitter.com/KNbPlpxdq5
— Rupali Tripathi (@RupaliTripathi6) July 25, 2023
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண