தனுஷின் ‘ராயன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | Raayan

6
Dhanush's Raayan Movie Release Date Locked
Dhanush's Raayan Movie Release Date Locked

தனுஷின் ‘ராயன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு:

நடிகர் தனுஷ் நடித்துள்ள ராயன் திரைப்படம் வரும் ஜூலை 26-ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

தனுஷின் ஐம்பதாவது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். வட சென்னையை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படம் வரும் ஜூலை 26-ஆம் தேதி உலகமுழுவதும் திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷின் ஐம்பதாவது படம் என்பதால் இப்படத்தின் மேல் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Dhanush's Raayan Movie Release Date Locked
Dhanush’s Raayan Movie Release Date Locked

 

தவறவிடாதீர்!

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ பட சென்சார் விவரம் இதோ

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0