சுதந்திர தினத்தில் ‘D50’ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக்?
தனுஷ் தற்போது, தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையைமைத்து வருகிறார். மொட்டை தலை கெட்டப்பில் தனுஷ் நடிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவல்படி இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃப்ர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண