தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி முக்கியமானது. பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை & அசுரன் என நான்கு பிளாக்பஸ்டர் படங்கள் இவர்கள் கூட்டணியில் வெளியாகியுள்ளது.


தனுஷ் தற்போது ஜகமே தந்திரம் ரிலீஸ் தேதியை எதிர்நோக்கியபடி, கர்ணன், கார்த்திக் நரேன் இயக்கத்தில் புதிய படம், பாலிவுட் படம் என அடுத்தடுத்து பிசியாகவுள்ளார். இந்த பக்கம் வெற்றிமாறன், சூரி நடிக்கும் ஒரு படம், அதைத் தொடர்ந்து தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்க ‘வாடிவாசல்’ என அடுத்தடுத்த இயக்கத்திற்கு ஆயுத்தமாகி வருகிறார். இந்நிலையில், மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாகவும், இப்படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. தனுஷ் ரசிகர்களிடம் கேள்விக்குறியாக இருந்த இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார் எல்ரெட் குமார். ரசிகர் ஒருவர் இந்த கேள்வியை டுவிட்டரில் கேட்க, அதற்கு ஆமாம் என கூறி இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த செய்தி தனுஷ் ரசிகர்களிடம் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


லாஸ்லியா நடிக்கும் கிரைம் திரில்லர் திரைப்படம்! புதுப்பட தகவல்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...