தற்போதைய தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணிகளில் முக்கியமானது தனுஷ் & வெற்றிமாறன் கூட்டணி. பொல்லாதவன் படம் மூலம் துவங்கிய இந்த கூட்டணி தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தொடர் வெற்றிப்படங்கள் கூடவே ஆடுகளம் மூலம் தேசிய விருதையும் இருவரும் வென்றார்கள்.
இந்நிலையில் இந்த வெற்றி கூட்டணி தற்போது ஐந்தாவது முறையாக மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அசுரன் படத்தைத் தொடர்ந்து RS இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கவிருந்தார் வெற்றிமாறன். துபாயில் வேலைக்காக செல்லும் தமிழர்கள் அங்கு படும் கஷ்டங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. தற்போது நிலவி வரும் கொரோனா பாதிப்பால் வெளிநாடுகளில் படப்பிடிப்பு என்பது எட்டாக்கனியாக மாறியுள்ள சூழ்நிலையில், இப்படத்தை இப்போது எடுக்க இயலாது என கருதி வேறு கதைக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஆனாலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் உடனே செய்ய வேண்டிய சூழலால், தற்போது மீண்டும் தனுஷுடன் இணைந்து அடுத்த படத்தை துவங்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தனுஷ் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது, மேலும் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கொட்டும் மழையில் அட்டகாச போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா!
இப்படத்தை அடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்க ‘வாடி வாசல்’ படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படத்தின் முதல் பார்வை நேற்று வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...