மீண்டும் இணையும் தனுஷ் – அனிருத் கூட்டணி | DNA is Back

0
Dhanush and Anirudh Team up Once again

தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இதைத் தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தற்போது முன்னணி இசையமைப்பாளராகியுள்ளார் அனிருத். 3 படத்தைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி, மாரி, தங்கமகன் உள்ளிட்ட படங்களில் தனுஷுடன் இணைந்து பணியாற்றினார் அனிருத்.

Dhanush and Anirudh Team up Once again
Dhanush and Anirudh Team up Once again

ஆனால், ‘தங்கமகன்’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து பணிபுரியவில்லை. தனுஷ் – அனிருத் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தால் இணைந்து பணிபுரியமாட்டார்கள் என்று தகவல் பரவியது. இந்நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் (அதாவது D44) இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை படைக்கு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தியை இருவரது ரசிகர்களுமே இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

‘புத்தம் புது காலை’ ஆந்தாலாஜி திரை விமர்சனம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...