13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடியது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்ய, பேட்டிங்கை துவங்கியது டெல்லி அணி துவக்கமுதலே அதிரடியை கிளப்பிய டெல்லி அணி இறுதி வரை அதிரடியை நிறுத்தவில்லை. இறுதியாக, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 228 ரன்கள் எடுத்து, 229 ரன்களை என்கிற கடின இலக்காக நிர்ணயித்தது.


இதனையடுத்து கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி துவக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலும், இரண்டாவதாக இறங்கிய நிதிஷ் ராணா(58) அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரசல் மற்றும் தினேஷ் கார்த்திக் வழக்கம்போல் சொதப்ப, இறுதியாக ஆட்டத்தை கையிலெடுத்த இயான் மார்கன்(44) மற்றும் ராகுல் திரிபாடி(36) வெற்றி இலக்கின் அருகே சென்றனர். இருப்பினும் 18 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில்லரான வெற்றியை பெற்றது டெல்லி கேபிடல்ஸ் அணி. 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்திருந்தது. டெல்லி அணி சார்பில் ஆன்ட்ரிச் நோர்ஜே 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
* அனுஷ்கா நடிப்பில் ‘நிசப்தம்’ திரைவிமர்சனம்
* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...