13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, இதனால் முதலில் பேட்டிங் துவங்கிய ஹைதரபாத் அணியில் ஆரம்பம் முதலே நிதானமாக ஆடத் துவங்கினர். இறுதியாக , 20 ஓவர் முடிவில் ஹைதரபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 45, ஜானி பெயிர்ட்ஷோ 53 மற்றும் கேன் வில்லியம்சன் 41 ரன்களும் எடுத்திருந்தனர். டெல்லி அணியில் அமித் மிஸ்ரா மற்றும் ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன்மூலம் டெல்லி அணிக்கு ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...