டியர் படத்திலிருந்து ‘Maja Wedding’ பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?

0
Dear movie second single Maja Wedding release date
Dear movie second single Maja Wedding release date

டியர் படத்திலிருந்து ‘Maja Wedding’ பாடல் ரிலீஸ் எப்போது தெரியுமா?:

ஜி.வி.பிரகாஷ் & ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘செத்தும் ஆயிரம் பொன்’ பட இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டியர்’. Nutmeg Productions சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் காளி வெங்கட், இளவரசு, ரோகினி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

குறட்டையை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், ரோமியோ பிக்சர்ஸ் இப்படத்தை தமிழகத்தில் வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாடலான “Maja Wedding” நாளை (மார்ச் 25) வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Dear movie second single Maja Wedding release date
Dear movie second single Maja Wedding release date

தவறவிடாதீர்!

யாஷ் நடிக்கவுள்ள ‘டாக்சிக்’ படத்தின் கதாநாயகிகள் இவர்களா? படக்குழு விளக்கம்

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0