ஜிவி பிரகாஷ் & ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டியர்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்:
ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டியர்’. நெட்மக்ஸ் பிரொக்ஷன்ஸ் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி, பிரத்விராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் காளி வெங்கட், இளவரசு, ரோகினி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், பிளாக் ஷீப் நந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
குறட்டை விடும் பெண்ணை மையமாக வைத்து காமெடி & ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், கேக் வெட்டி இந்த மகிழ்ச்சியை கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகிறது.








இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண