சந்தானத்தின் ‘DD ரிட்டன்ஸ்’ பட வசூல் நிலவரம் இதோ:
சந்தானம் நடிப்பில், பிரேம் ஆனந்த் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘DD ரிட்டன்ஸ்’. ஹாரர் காமெடி படமாக வெளியான இப்படத்தில் சுரபி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, ஃபெப்சி விஜயன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


வெளியான நாள்முதல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தின் இதுவரையிலான வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளியாகி மூன்று நாட்கள் முடிவில் உலகமுழுவதும் ரூ.11 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.9 வரை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வரிசையாக பிளாப் படங்களை கொடுத்து வந்த சந்தானத்திற்கு இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண