ஏ.ஆர்.ரஹ்மானுடன் தனுஷ்! ‘D50’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்: ‘கேப்டன் மில்லர்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.


இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்திற்கான பாடல் கம்போசிங் பணிகளை இசையமைப்பாளர் ஏஆர்.ரகுமான் தொடங்கியுள்ளார். அவருடன் இணைந்து நடிகர் தனுஷூம் அந்த பணிகளில் ஈடுபட்டுள்ளார். மேலும், இதுக்குறித்த புகைப்படம் ஒன்றும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண