சூர்யா படத்தில் இணையும் க்யூட் நடிகை! தமிழில் ரீ-என்ட்ரி:
கங்குவா படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக சுதா கொண்காரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சூர்யாவின் 2D என்டர்டையிமென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இது இவர் இசையமைக்கும் 100வது படமாகும்.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் பிரபல நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, ‘சூர்யா 43’ என தற்காலிக பெயரிட்டுள்ள இப்படத்தின் கதாநாயகியாக நஸ்ரியா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையானால் 10 வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ- என்ட்ரி கொடுக்கவுள்ளார் நஸ்ரியா. அடுத்த ஆண்டு இப்படத்தின் படபிடிப்பு துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண