13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி அபிதாபியில் நடைபெறவுள்ளது, முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடி வருகிறது.
டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, இதையடுத்து களமிறங்கிய மும்பை அணியின் துவக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் குவின்டன் டி காக் களமிறங்கினர். 20 ஓவர் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை குவித்துள்ளது. மும்பை அணியில் அதிகபட்சமாக சவுரவ் திவாரி 42 ரன்களும், குவின்டன் டி காக் 33 ரன்களும் எடுத்துள்ளனர். சென்னை தரப்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகளை, ஜடேஜா மற்றும் தீபக் சாஹர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதன்மூலம் சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
CSK vs MI: Mumbai Indians Score Board




செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...