அமெரிக்கா சென்று திரும்பிய கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று!

0
Coronation infection confirmed for Kamal Haasan
Coronation infection confirmed for Kamal Haasan

நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் தனது கட்சி பிரமுகர் ஒருவரின் கடை திறப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். வேலைகள் முடிந்து இந்தியா திரும்பிய கமலுக்கு லேசான இருமல் ஏற்பட்டுள்ளது. பிறகு, சோதித்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில் தற்போது மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Coronation infection confirmed for Kamal Haasan
Coronation infection confirmed for Kamal Haasan

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘ அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் ‘ என கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்