ஜீவா, ஸ்ரேயா நடிப்பில் வெளியான ‘ரௌத்திரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார் கோகுல், படம் பெரிய வெறி இல்லையென்றாலும் ரசிகர்களுக்கு பிடித்த படமாக அப்படம் அமைந்தது.


இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதியை வைத்து ‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கினார், நந்திதா ஸ்வேதா, பசுபதி, சூரி, ரோபோ ஷங்கர், மதுமிதா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்போது வரையிலும் இப்பட வசனங்கள் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது. இப்படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஜுங்கா படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் கோகுல் தற்போது மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான ஹெலன் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி முடித்துள்ளார். இதில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன் ஆகியோர் நடிக்கின்றனர்.


———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்
👉 ‘சுஷாந்த் மரணத்திற்கு இது தான் காரணம்’ கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...