ஜவான் கதை சர்ச்சை! அட்லி மீது தயாரிப்பு சங்கத்தில் புகார்: தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை பெற்ற இயக்குனர் அட்லி, தற்போது ஹிந்தியில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

வழக்கமாக பழைய வெற்றிப்படங்களின் திரைக்கதையை பட்டி, டிங்கரிங் பார்த்து எந்தவித அனுமதியும் இல்லாமல் படத்தை முடித்துவிடுவார், படம் வெற்றிப் பெற்றாலும் இதுக்குறித்த சர்ச்சை அடங்காது. இது அட்லியின் கடந்தகால வரலாறு, தற்போது மீண்டும் அதுபோல ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அட்லி தற்போது இயக்கிவரும் ஜவான் திரைப்படம் 2006ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான பேரரசு படத்தின் தழுவல் என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக 9ஆம் தேதி செயற்குழுவில் முடிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE