அவதூறு காட்சிக்காக அனுஷ்கா ஷர்மா மீது மனித உரிமை கமிஷனில் புகார்

0
Complaint Against Anushka Sharma on the slander scene in Paatal Lok

பிரபல பாலிவுட் நடிகையும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா மீது மனித உரிமை கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Complaint Against Anushka Sharma on the slander scene in Patal Lok
Anushka Sharma

நடிகையான இவர் தயாரிப்பாளராகவும் NH 19,  பாரி உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளார், அந்த வகையில் இவர் தயாரித்த ‘பாதல் லோக்’ என்கிற வெப் தொடர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த வெப் தொடரில் அருணாசல பிரதேச மாநிலத்தில் வாழும் குறிபிட்ட இன மக்களை அவதூறு செய்வதுபோன்ற காட்சிகள் இருப்பதாக அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தேசிய மனித உரிமை கமிஷனில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் பாதல் லோக் என்கிற வெப் தொடரில் எங்கள் இனத்தவரை இழிவுபடுத்தும் காட்சிகள் இடபெற்றுள்ளன, இதனால் எங்கள் இனத்தவர்கள் வேதனையில் உள்ளனர். எனவே அந்த தொடரை தயாரித்துள்ள அனுஷ்கா சர்மா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதுபோல் அந்த இனத்தை சேர்ந்த இளைஞர் அமைப்பினர் அனுஷ்கா சர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றையும் அனுப்பி உள்ளனர்.

Complaint Against Anushka Sharma on the slander scene in Patal Lok
Paatal Lok Web Series Poster

ஏற்கனவே, உத்தரபிரதேசத்தை சேர்ந்த எம்.எல்.ஏ நந்தகிஷோர் குர்ஜார் தனது புகைப்படத்தை அனுமதி இன்றி வெப் தொடரில் பயன்படுத்தி உள்ளதாக அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஆல்யா மானசாவின் லேட்டஸ்ட் வைரல் வீடியோ:

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...