கோப்ரா திரைப்பட விமர்சனம் | Cobra Movie Review and Rating

0
Cobra Movie Review and Rating
Cobra Movie Review and Rating

கோப்ரா திரைப்பட விமர்சனம் | Cobra Movie Review and Rating

படக்குழு: 

நடிகர்கள்: விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், ரோஷன் மேத்திவ், மிருணாளினி ரவி , மீனாக்ஷி கோவிந்தராஜன் மற்றும் பலர்.

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு: புவன் ஸ்ரீநிவாசன், ஹரிஷ் கண்ணன்

எடிட்டிங்: புவன் ஸ்ரீநிவாசன், ஜான் ஆப்ரகாம்

தயாரிப்பு: செவன்த் ஸ்க்ரீன் ஸ்டுடியோ

இயக்கம்: அஜய் ஞானமுத்து.

Cobra Movie Review and Rating
Cobra Movie Review and Rating

கதைச்சுருக்கம்:

உலக நாடுகளில் உள்ள முக்கிய புள்ளிகளை பணத்திற்காக கொலை செய்யும் படத்தின் நாயகன் விக்ரம், இவர் செய்யும் ஒவ்வொரு சம்பவமும் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டு நடந்தேருவதால் இன்டர்போல் அதிகாரியாக வரும் இர்பான் பதானுக்கு தலை சுற்றலே ஏற்படுகிறது. இறுதியாக விக்ரம் இந்த கொலைகளை பணத்திற்காக மட்டும் செய்கிறாரா? உண்மையில் விக்ரம் தான் செய்தாரா? இறுதியாக போலீஸிடம் சிக்கினாரா இல்லையா? என்கிற சுவாரஸ்யமே முழுக்கத்தை.

Cobra Movie Review and Rating
Cobra Movie Review and Rating

FC விமர்சனம்:

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பல்வேறு கெட்டப்களில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் எப்படி இருக்கு வாருங்கள் விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்கள் பொறுத்தவரை விக்ரம் சொல்லவா வேண்டும் நடிப்பு அசுரன் படமுழுக்க தனது தலைசிறந்த நடிப்பால் அசர வைத்துள்ளார். அதிலும் அந்த போலீஸ் இன்ட்ராகேஷன் காட்சியில் மிரட்டியிருப்பார் மனுஷன். நாயகியாக வரும் ஸ்ரீநிதி ஷெட்டி அழகில் கவர்கிறார், கொடுத்த பாத்திரத்தை அழகாகவே செய்துள்ளார். அதேபோல் மிருணாளினி ரவியும் குறைவான நேரமே வந்தாலும் நிறைவாக செய்துள்ளார். இன்டர்போல் அதிகாரியாக வரும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், வில்லன் ரோஷன் மேத்தீவ் இருவருமே எடுத்துக் கொண்ட பாத்திரத்தை குறையில்லாமல் செய்துள்ளனர். இர்பானுக்கு இது முதல் அனுபவம் அதனால் சில நெருடல்கள் அவ்வபோது வந்துதான் செல்கிறது.

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டடித்திருந்தாலும் பின்னணி இசை வழக்கமான ரஹ்மானின் இசை இல்லாமல் புதுவிதமாக உள்ளது. ஒவ்வொரு காட்சியையும் அழகாக உயர்த்தியுள்ளது. புவன் ஸ்ரீநிவாசன், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் பளிங்கு கண்ணாடி போல அவ்வளவு கிளாரிட்டி, உயர்தரத்தில் காட்சிகளை மெருகேற்றியுள்ளனர். எடிட்டர் தான் என்ன வேலை செய்தார் என்று தெரியவில்லை, 3 மணி நேரம் படம் ஓடுது, இதுவே படத்தின் பெரிய குறையாக இருக்கிறது. காரணம் திரைக்கதையில் இன்னுமே சுவாரஸ்யத்தை சேர்த்திருக்கலாம். முதல் பாதி கூட பரவாயில்லை, இரண்டாம் பாதிதான் சிறிய லேக்கிங், குழப்பம் எல்லாம் வந்து செல்கிறது. அதேநேரம் படத்தின் இடைவேளை எதிர்ப்பாராத திருப்பம் சூப்பர்.

Cobra Movie Review and Rating

விக்ரமின் கெட்டப்புகளில் சிலவற்றில் மேக்கப் மொக்கையாகதான் இருக்கிறது, ஏதோ மாஸ்கை மூஞ்சில் அப்பியது போல இருக்கிறது. படத்தின் சுவாரஸ்யம் குறைவதற்கு காரணம் கதாப்பாத்திரங்கள் அழுத்தமாக இல்லை, நமக்கு எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. விக்ரமின் கதாப்பாத்திரத்தை விட்டுவிட்டால் அடுத்துள்ள இரண்டு முக்கிய பாத்திரங்கள் இன்டர்போல் அதிகாரி இர்பான் பதான், முக்கிய வில்லன் ரோஷன் மேத்தீவ். இரண்டுமே டம்மியாக தான் எழுதப்பட்டுள்ளது. அதிலும் வில்லன் பாத்திரத்தை மொக்கையாக காட்டியுள்ளதால் நமக்கு பெரிய பயமோ, ஹீரோவை என்ன செய்ய போகிறானோ என்கிற பதைபதைப்போ சுத்தமாக இல்லை. இது எல்லாம் தாண்டி, இப்படத்தில் ஏகப்பட்ட லாஜிக் குறைகள் படமுழுக்க வருகிறது, இதனாலேயே பெரிதாக ஒட்டவில்லை. இறுதியாக படம் எப்படி என்றால்? விக்ரம் நடிப்பிற்க்காக (மட்டுமே) ஒருமுறை பார்க்கலாம், ஆனால் அதற்கும் பொறுமை வேண்டும் பாஸ். ஆவரேஜ் ரகம்தான்…

Cobra Movie Film Crazy Media Rating: 2.5 /5

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE