‘கோப்ரா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி! விக்ரம் ரசிகர்கள் உற்சாகம்

0
Cobra Movie Release Date Announced
Cobra Movie Release Date Announced

‘கோப்ரா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி! விக்ரம் ரசிகர்கள் உற்சாகம்: நடிகர் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோப்ரா’. செவன்த் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

KGF பட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் இர்பான் பதான், மியா ஜார்ஜ், மிருனாளினி ரவி, ரோஷன் மாதவ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். நீண்ட மாதங்களாக தயாராகி வரும் இப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், VFX பணிகள் காரணமாக தள்ளிப்போனது.

இந்நிலையில் அனைத்து பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் கோப்ரா படத்தை வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Cobra Movie Release Date AnnouncedCobra Movie Release Date Announced
Cobra Movie Release Date Announced

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE