ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த் காலமானார்!

0
sv

சுவாரஸ்யமான சினிமா & பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு

Film Crazy Media Youtube சேனலை

Subscribe செய்யுங்க....

பத்திரிகைகளுக்கு புகைப்பட கலைஞராக அறிமுகமாகி, தனது முனைப்பினால் இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளராக மாறியவர் கே.வி.ஆனந்த். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘தேன்மாவின் கொம்பத்து’ படமூலம் ஒளிப்பதிவாராக அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதை பெற்றார். பிறகு காதல் தேசம், நேருக்கு நேர், முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பின்னர் கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த கே.வி.ஆனந்த், அயன், கோ, மாற்றான், கவன், அனேகன் & காப்பான் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அயன் படத்தின் மூலம் சூர்யாவிற்கும், கோ படத்தின் மூலம் ஜீவாவிற்கும் பாக்ஸ்ஆபிசில் முத்திரை பதிக்க செய்தவர் இந்த கே.வி.ஆனந்த். 54 வயதான இவர் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார் என்கிற செய்தி திரைத்துறைக்கும், சினிமா ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சி தான். RIP K. V. Anand sir!

Cinematographer & Director KV Anand Passed Away
Cinematographer & Director KV Anand Passed Away

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here