விக்ரம் 60 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

0
Chiyaan 60 Movie Official Announcement

‘சியான்’ விக்ரம் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா, மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு பெரிய படங்களில் நடித்து வருகிறார்.

Chiyaan 60 Movie Official Announcement

இப்படங்களின் படப்பிடிப்பு ஆரம்பமாகி தற்போது லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க விக்ரம் நடிக்கவுள்ள 60 -வது படத்தை பற்றிய தகவல்கள் இணையத்தில் உலா வந்த வண்ணம் இருந்தது. ‘சியான் 60’ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளதாகவும், லலித் குமார் தயாரிக்கவுள்ளதாவும் தகவல்கள் வெளியாகியது. மேலும், இப்படத்தில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. எனினும் அதிகாரப்பூர்வமற்ற செய்திகளாக இருந்த நிலையில் தற்போது படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘குயின் 2-வில் பரபரப்பு காட்சிகள் அதிகம்’ – ரம்யா கிருஷ்ணன்

Chiyaan 60 Movie Official Announcement

விக்ரம் 60 படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க, 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் விக்ரமுடன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கவுள்ளார். பேட்ட படத்தை ராக்ஸ்டார் அனிருத்துடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ். இந்த செய்தி விக்ரம் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chiyaan 60 Movie Official Announcement
Chiyaan 60 Movie Official Announcement

Twitter Feed:

 

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் த்ரில்லரான ‘பெண்குயின்’ டீசர்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…