‘சித்தா’ திரைப்பட விமர்சனம் | Chiththa Movie Review & Rating

2
Chiththa Movie Review & Rating
Chiththa Movie Review & Rating

‘சித்தா’ திரைப்பட விமர்சனம் | Chiththa Movie Review & Rating

படக்குழு:

நடிகர்கள்: சித்தார்த், நிமிஷா சஜயன், சஹாஸ்ரா ஸ்ரீ, அஞ்சலி நாயர் மற்றும் பலர்.

இசை: பாடல்கள்:
சந்தோஷ் நாராயணன், திபு நினன் தாமஸ்
பின்னணி இசை:
விஷால் சந்திரசேகர்

ஒளிப்பதிவு: பாலாஜி சுப்பிரமணியம்

எடிட்டிங்: சுரேஷ் A பிரசாத்

தயாரிப்பு: Etaki Entertainment

இயக்கம்: S.U.அருண் குமார்.

Chiththa Movie Review & Rating

கதைச்சுருக்கம்:

தனது அண்ணன் மறைவிற்கு பிறகு அண்ணன் மகளை தன் மகளாக நினைத்து பாசத்தை காட்டி வளர்க்கும் ஹீரோ சித்தார்த். ஒருக்கட்டத்தில் அந்த மகள் காணாமல் போக, தவித்து நிற்கிறார் ஹீரோ. இதன்பிறகு அண்ணன் மகளுக்கு என்ன ஆனது? ஹீரோ கண்டுபிடித்தாரா? என்கிற பதற்றமே இப்படத்தின் கதைச்சுருக்கம்.

FC விமர்சனம்:

‘பண்ணையாரும் பத்மினியும், ‘சேதுபதி’ படங்களை இயக்கிய S.U.அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் தயாரித்து, நடித்து இன்று(செப்.28) வெளியான ‘சித்தா’ திரைப்படம் எப்படி இருக்கு? வாருங்கள் விமர்சனத்திற்கு சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை சித்தார்த், படமுழுக்க அருமையான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். குறிப்பாக குழந்தையுடன் பாசமாக பழகுவதாகட்டும், குழந்தையை தொலைத்து விட்டு பதட்டத்துடன் தேடும் காட்சிகள் என அனைத்திலும் ஸ்கோர் செய்துள்ளார். அண்ணன் மகளாக வரும் சஹாஸ்ரா ஸ்ரீ படத்தின் கதாநாயகி என சொல்லலாம் அந்தளவிற்கு மிகசிறப்பாக செய்துள்ளார். இதேபோல் நண்பனின் மகளாக வரும் குழந்தை இருவருமே கைத்தட்டல் பெறுகின்றனர். இவர்களை தவிர, பிரபல மலையாள நடிகை நிமிஷா சஜயன் கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்துள்ளார்.

Chiththa Movie Review & Rating
Chiththa Movie Review & Rating

பாடல்கள் ஓகே ரகம் என்றாலும் விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. இப்படத்தின் கதையை பொறுத்தவரை 2013ஆம் ஆண்டு வெளியான கொரியன் படமான ‘Hope’ படத்தின் தழுவலாக எடுக்கப்பட்டுள்ளது. எனினும் சில கூடுதல் நல்ல விஷயங்களை சேர்த்து இயக்குனர் கொடுத்துள்ளவிதம் பாராட்டுக்குரியதாக அமைந்துள்ளது. படத்தில் குறையாக தெரிவது நல்ல கருத்தை சொல்ல இவர்கள் எடுத்துக்கொண்ட நேரம், குறிப்பாக கடைசி ஒரு மணி நேரம் ஜவ்வாக இழுத்து சென்று படத்தை முடித்துள்ளனர். இது நமக்கு பெரிய சோர்வையும், சலிப்பையும் தருகிறது. நிறைய மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள், கதைக்கு தேவையில்லாத கதாப்பாத்திரங்கள் (உதாரணமாக நிமிஷா சஜயன்) என சில விஷயங்கள் உறுத்தலாகவே வந்து செல்கிறது. மொத்தமாக படம் எப்படி என்றால், இன்றைய காலக்கட்டத்திற்கு சொல்ல வேண்டிய கதைதான் என்றாலும் சொன்ன விதத்தில் சொதிப்பியுள்ளனர். ஓகே ரகம் தாங்க…

Adult Warning: குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் சொல்லப்பட வேண்டிய சென்சிடிவ் களம்தான், ஆனால் எந்தவொரு முகசுளிக்கும் காட்சிகள் எதுவும் இல்லை.

Chiththa Movie Film Crazy Rating: 3 /5

 

தவறவிடாதீர்!

‘இறைவன்’ திரைப்பட விமர்சனம் இதோ

“தமிழ் நடிகர் தொல்லை கொடுத்தாரா?” நித்யா மேனன் விளக்கம்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.